இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, February 15, 2012

'பவுடர் கோட்டிங்'கில்


சறுக்கலுக்கு மேல் சறுக்கல்... சளைக்காத எழில்ராணி...
சாமான்ய பெண்ணின் சாதனை கதை

''ஒரு தொழில்ல இறங்கி தோல்வி அடைஞ்சுட்டா, நமக்குத் திறமையில்லைங்கற முடிவுக்கு வந்துடக்கூடாது. புறச்சூழலைப் பொறுத்தும் அந்தந்தத் தொழிலுக்கு ஏற்ப வெற்றி, தோல்விகள் அமையறதால, வேறொரு தொழில் நம்மை உச்சத்துக்கு கொண்டு போகவும் வாய்ப்பிருக்கு!''

- சறுக்கல்களுக்குப் பிறகு உயரத்தை தொட்டதால், அனுபவ வார்த்தைகளால் வழிகாட்டுகிறார் எழில்ராணி.

பொருளாதார ரீதியான நெருக்கடிகள் இல்லாவிட்டாலும்கூட, உழைப்புத் தாகத்தால் சிறு வயதிலிருந்தே பல தொடர் முயற்சிகள் எடுத்திருக்கிறார் எழில்ராணி. ஆனால், எதுவுமே பெரிதாகக் கை கொடுக்கவில்லை. என்றாலும், தளராத நம்பிக்கையோடு புதுமையான தொழிலாக இருக்கும் மின்சாதனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் சாதனங்களுக்கான 'பவுடர் கோட்டிங்’ தொழிலை கையிலெடுத்தவர்... இன்று தன் உழைப்பால் வெற்றிகண்டிருக்கிறார்!

''சேலம் பக்கத்துல உள்ள கச்சராயனூர்தான் சொந்த ஊர். எங்கப்பா அரசு ஊழியர்ங்கறதால எந்த சிரமமும் இல்லாமதான் வளர்ந்தேன். ஆனாலும், சின்ன வயசுல இருந்தே சொந்த முயற்சியில பணம் சம்பாதிக்கணும்ங்கற துடிப்பு எனக்குள்ள இருந்துக்கிட்டே இருந்துச்சு. நான் பி.எஸ்சி. படிச்சிட்டிருந்தப்பவே, பெரிய ஜவுளிக்கடைகள்ல புடவைகளை வாங்கிக்கிட்டு வந்து என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட விற்பனை செஞ்சேன். அதுக்கு எந்த முதலீடும் தேவைப்படல. விற்பனை செஞ்ச பிறகு, அடக்க விலையை ஜவுளிக்கடைகளுக்கு கொடுத்தா போதும்'' என்றவர்,

''பி.எஸ்சி-க்கு மேல என்னை படிக்க வைக்கல. வீட்ல சும்மா இருக்கக் கூடாதேனு, அரசு வேலைகளுக்கும் முயற்சிகள் செஞ்சேன். போஸ்டல்ல எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிச்சுக்கிட்டே, நர்ஸரி ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்த்தேன்'' என்பவருக்கு... சேலம், கந்தனூரைச் சேர்ந்த கனகசபாபதியோடு திருமணம் முடிந்திருக்கிறது.

''திருச்சி, காஜாமலையில அவர் வெல்டிங் நிறுவனம் நடத்திக் கிட்டு இருந்தால, இங்கயே செட்டிலாயிட்டோம். அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கவே, வீட்லயே இருக்க வேண்டியதாயிடுச்சு. ஆனாலும் போஸ்டல்ல பி.எட். படிச்சேன். ஓரளவுக்கு குழந்தைகள் வளர்ந்ததும், மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பயிற்சிக்குப் போனேன். சொந்தமா கம்ப்யூட்டர் சென்டர் தொடங்கலாம்னு முடிவு எடுத்தேன். ஆனா, அந்த முயற்சி வெற்றி பெறல. பிறகு... கூட்டு முயற் சியா, குடும்பத் தோழி ஒருத்தரோடு சேர்ந்து ரெடிமேட் துணிக்கடை தொடங்கினேன். அதுல எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கல...''

- வெற்றி வசப்படவில்லை என்ற போதும் துவண்டுவிடவில்லை எழில் ராணி. 'அடுத்து என்ன பண்ணலாம்..?’ என்றே தேடியிருக்கிறார்.

''நான், கோயம்புத்தூர்ல வருஷா வருஷம் நடக்கற 'கொடீஸியா’ தொழில் கண்காட்சிக்கு போறது வழக்கம். அஞ்சு வருஷத்துக்கு முன்ன அங்க போயிருந்த சமயம் நிறைய தொழில் பத்தின விவரங்களும், அதுக்கான உபகரணங்களையும் பார்த்தேன். அங்கதான் இந்த 'பவுடர் கோட்டிங்’ தொழில் எனக்கு அறிமுகமாச்சு. ஆண்கள்கூட அந்த ஸ்டால்ல நின்னு கவனிக்க விரும்பாம அடுத்த ஸ்டாலுக்கு நகர்ந்திட்டிருக்க... நான் ஆர்வமா போய் 'இதென்ன..?’னு விசாரிச்சேன். 'மின் சாதனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் சாதனங் கள்ல இருக்கற இரும்பு பாகங்களுக்கு பெயின்ட் ஸ்பிரே செய்றதுதான் முன்ன வழக்கமா இருந்துச்சு. அதைவிட நேர்த்தியான, தரமான நவீன தொழில்நுட்பம்தான் இந்த பவுடர் கோட்டிங்'னு விளக்கினாங்க...'' என்றவர் கற்பூரமாக அதைப் பற்றிக் கொண்டிருக்கிறார்.

''ஆட்டோமொபைல்ஸ் துறையில திருச்சி எப்பவும் பரபரனு இருக்குங் கறதால, 'இது நம்ம ஊருக்கு கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும். இந்த தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்’னு உறுதியா நம்பினேன். 'பொண்ணுங்களுக்கு ஏத்த தொழிலா செய்யப் பார்க்காம, ஏன் இப்படி முன்ன பின்ன தெரியாத தொழில்ல இறங்கப் பார்க்கற..?’னு நிறைய பேர் பயமுறுத்தினாங்க. 'இனி வரும் காலங்கள்ல இது பொண்ணுங் களுக்கு, இது ஆம்பளைங்களுக்குனு எந்தத் தொழிலும் இருக்கப்போறதில்ல. எல்லாரும் எல்லா தொழிலையும் செய்ய லாம். தேவை... உழைப்புதான்!’னு அவங் களுக்கெல்லாம் உறுதியான பதிலை சொல்லிட்டு, தொழில் ஆரம்பிக்கற வேலைகளைத் தொடங்கினேன்'' என்றவர்,

''முதல் வேலையா, முறையான பயிற்சியை எடுத்துட்டு, பேங்க் லோனுக்கு அலைஞ்சேன். ஒரு கட்டத்துல என் நகைகளை எல்லாம் வித்து, முதலீட்டுக்கு ஏற்பாடு செஞ்சேன். இடம் பார்த்தேன். நானும் என் வீட்டுக்காரருமே மாறி மாறி முதலாளி, தொழிலாளியா இருந்து வேலை களைச் செய்தோம். என் நம்பிக்கை வீண் போகல. தொழிலை தொடங்கின இந்த நாலு வருஷத்துக்குள்ள இப்ப மாசம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கற அளவுக்கு வளர்ந்திருக்கோம்!''

- முகம் கொள்ளா மகிழ்ச்சியோடு சொன்னார் எழில்ராணி.

நன்றி: அவள் விகடன் - 22 ஏப்ரல் 2011
உதரனம்மாக குறும் படம் பார்க்கவும்


தொடரும்..........>>>>>>>>>>>>>>>>>முழு விபரம் எப்படி

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites