இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, February 27, 2012

பிரெட்கிராப்டிங் தயாரிப்பது எப்படி

பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க எத்தனையோ கவுரவமான வழிகள் உள்ளன. அவசரஅவசரமாய் தூங்கியெழுந்ததும் ஒன்றும் பாதியுமாய் சமையலை முடித்து அரக்கப்பரக்க குழந்தைகளை பள்ளிக்குத் துரத்தி விட்டு ஓட்டமும் நடையுமாய் சென்று காலைப் பேருந்தை பிடித்து அலுவலகம் போனால் உயரதிகாரியிடம் திட்டு வாங்கி... இவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு சாரசரி பெண்ணால் எவ்வளவு சம்பாதித்து விட முடியும்? அதிகபட்சம் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்குமா?

* அதே அளவு வருவாயை நாம் வீட்டிலிருந்தபடியே நமக்கு விருப்பமான நேரத்தில் பிடித்தமான வேலையைச் செய்யவும் முடியும். அட அது எப்படி என்கிறீர்களா? சாப்பிட பயன்படுத்துகிறோமே ரொட்டி. அதைக் கொண்டு விதவிதமான வடிவங்களில் கலைப் பொருட்களைச் செய்வதுதான் "ப்ரெட்கிராப்டிங்" என்கிறார்கள். ஆனால் இதை பார்த்து ரசிக்கத்தான் முடியும்.

* சாப்பிட முடியாது காரணம் இதில் துத்தநாக ஆக்ஸைடு கலந்திருப்பதுதான். எறும்பு பூச்சிகளின் அரிப்பிலிருந்து இப்பொருட்களைக் காப்பதற்காகவே துத்தநாக ஆக்ஸைடு கலக்கிறார்கள்.

* வீட்டிலுள்ள அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு தன் கையால் செய்த பொருட்களால் வீட்டை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், ப்ரெட்கிராப்ட் வெஜிடபுள் கார்விங் போன்ற விஷயங்களில் பெண்கள் ஈடுபடுவது அவர்களின் ரசனையை உயர்த்துவதுடன் குடும்ப வருவாயைப் பெருக்கும்.

* பிரெட் 5 துண்டுகள், துத்தநாக ஆக்ஸைடு ஒரு டீஸ்பூன், பெவிகால்- தேவையான அளவு, வளையும் தன்மையுள்ள மென்மையான கம்பி, பேப்ரிக் பெயிண்ட்- ஏதேனும் 4 நிறங்கள், ஐஸ்கிரீம் கிண்ணம்-1 , தேங்காய் எண்ணெய் சிறிதளவு.

செய்முறை:

* பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். பிரெட்தூள், மற்றும் துத்தநாக ஆக்ஸைடை ஒன்றாகக் கலந்து தேவையான அளவு பெவிக்கால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* மாவு பிசையும் போது கையில் பிசுபிசுப்பாக ஒட்டிக்கொள்ளாமல் இருக்க உள்ளங்கையில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும். கிண்ணத்தைச் சுற்றி பெவிகால் தடவவும். பெவிக்காலின் மேல் பேப்பரை ஒட்டவும். பிசைந்து வைத்துள்ள மாவை பேப்பரில் ஒட்டவும். வளைவாக இருப்பது போல் கம்பியைச் சொருகவும்.

* (இது கூடை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்) ஒவ்வொன்றும் காய்ந்த பிறகுதான் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும். காய்வதற்கு எப்படியும் மூன்று நாட்களாவது ஆகும்.

* முதலில் டெடியின் உடம்பைச் செய்துவிட்டு கை, கால் தலை செய்வதற்காக உடம்பின் மேல் பக்கவாட்டில் கைகளுக்காக இரு பக்கங்களிலும் இரண்டு சிறிய கம்பியும், கீழ் பக்கவாட்டில் கால்களுக்காக இரண்டு சிறிய கம்பியும், உடம்பின் மேல் பாகத்தில் தலைக்காக இரண்டு கம்பியும், சொருகி வைக்கவும்.

* உடம்பு பகுதி காய்ந்த பிறகு கை, கால், தலை என்று சரி செய்து அதற்காகவிடப்பட்டுள்ள கம்பியில் அழகாக சொருகி விடுங்கள். தலை செய்யும் போதே காதுக்காக இரண்டு கம்பி செய்த பிறகு காதையும் செய்து கம்பியில் பொருத்தவும்.

* முழுமையாக எல்லாம் காய்ந்த பிறகு பேப்ரிக் பெயிண்ட் கொண்டு வண்ணம் தீட்டுங்கள். கூடையைச் சுற்றி, பூ, இலை என்று நாம் செய்யும் அலங்காரங்கள் எல்லாம் கற்பனையைப் பொருத்தது.

* உதாரணமாக பூ என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் செய்வதற்கு பெரிதாக ஒன்றும் மெனக்கிட வேண்டாம். சுண்டைக்காய் அளவு மாவை உருட்டிக் கொண்டு பேனாவின் பின் பக்கத்தினால் மாவை அழுத்தினால் பூ, ரெடி. இதை கூடையிலுள்ள கம்பியில் ஆங்காங்கே சொருகி வைத்தால் அழகான பூக்கூடை ரெடி.

கைவேலை செய்வதற்கு நிறைய பொறுமையும் ஆர்வமும் தேவை. இந்த மாதிரி ஒரு கலைப் பொருளைச் செய்ய 50லி ருந்து 75 ரூபாய் வரைதான் ஆகும். ஆனால் கடைகளில் 150 லிருந்து 200 ரூபாய் வரை கொடுத்து வாங்கத்தயாராக இருக்கிறார்கள். தெரிந்தவர்களுக்குப் பரிசாகவும் அளிக்கலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites